உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பொலிவிழந்த பெயர் பலகை

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின், உணவு பாதுகாப்பு பிரிவின், மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய மண்டல புற்றுநோய் மைய வளாகத்தில் இயங்கி வருகிறது.மாவட்ட முழுவதிலும் உளள நுகர்வோர், உணவுப் பொருள் தயாரிப்போர், உணவக உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு துறை
 உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பொலிவிழந்த பெயர் பலகை

காஞ்சிபுரம்:தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின், உணவு பாதுகாப்பு பிரிவின், மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய மண்டல புற்றுநோய் மைய வளாகத்தில் இயங்கி வருகிறது.

மாவட்ட முழுவதிலும் உளள நுகர்வோர், உணவுப் பொருள் தயாரிப்போர், உணவக உரிமையாளர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலக வளாகத்தின் வெளிப்புற சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத் துறையின் பெயர் பலகையில் உள்ள எழுத்துகள் மறைந்தும், பேனர் கிழிந்தும், நிறம் மங்கியும் பொலிவிழுந்தும் உள்ளது.

இதனால், உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு வருவோர் அலுவலகத்தை கண்டறிய மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு புதிய பெயர் பலகை வைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X