பந்தலுார்:பந்தலுாரில், போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடகம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பந்தலுார் சுற்றப்புற பகுதிகளில், அய்யன்கொள்ளி ஸ்ரீ சரஸ்வதி மகா வித்யாலயா, சேரம்பாடி மற்றும் எருமாடு காவல்துறை, வியாபாரி சங்கங்கள் இணைந்து, போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம், பேரணி நடத்தினர்.
தொடர்ந்து, சேரம்பாடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் பிரபு வரவேற்றார். பள்ளி தாளாளர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு தெரு நாடகம் மற்றும் நடனம் இடம்பெற்றது.
தாளாளர் மனோஜ் குமார் பேசுகையில்,''போதை பழக்கங்களால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இளைய தலைமுறை கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். பள்ளி முதல்வர் அன்பரசி நன்றி கூறினார்.