காஞ்சியில் வளர்ச்சி பணி குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து, கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன், நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, பயிற்சி கலெக்டர் அர்பித்ஜெயின் மற்றும் துறை சம்பந்தமான அதிகாரிகள் உடன் சென்றனர்.காஞ்சிபுரம் வடக்கு மாடவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை 8:30 மணிக்கு, முதல்வரின் காலை உணவு
 காஞ்சியில் வளர்ச்சி பணி குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து, கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன், நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, பயிற்சி கலெக்டர் அர்பித்ஜெயின் மற்றும் துறை சம்பந்தமான அதிகாரிகள் உடன் சென்றனர்.

காஞ்சிபுரம் வடக்கு மாடவீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை 8:30 மணிக்கு, முதல்வரின் காலை உணவு திட்டத்தை முதலில் கண்காணிப்பு அலுவலர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம், ஓரிக்கையில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.

மதியம் 3:00 மணிக்கு, உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலையாங் குளம் கிராமத்தில், இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும், 118 வீடுகளின் தற்போதை நிலை குறித்து பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து அதே கிராமத்தில் 'மக்களை தேடி மருத்துவம் திட்ட' பயனாளிகளிடம், குறைகளை கேட்டறிந்தார்.

இறுதியாக, உத்திரமேரூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மருத்துவ மனை கட்டட பணி, ராவதநல்லுார் அரசு பள்ளி சீரமைப்பு பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X