காட்டு யானைகள் தொடர் 'விசிட்'; வாழை, தென்னை மரங்கள் சேதம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:காட்டு யானைகளால் ஆதிமாதையனுார், தோலம்பாளையம் பகுதிகளில், 500 வாழை மரங்களும், ஏராளமான தென்னை மரங்களும் சேதமடைந்தன.காரமடை வனப்பகுதிக்கு உட்பட்ட ஆதிமாதையனுார், தோலம்பாளையம், வெள்ளியங்காடு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இரவில் இப்பகுதிகளுக்கு வரும் யானைகள், வாழை, தென்னை மரங்களையும், தீவன பயிர்களையும், சோள பயிர்களையும்
 காட்டு யானைகள் தொடர் 'விசிட்'; வாழை, தென்னை மரங்கள் சேதம்

மேட்டுப்பாளையம்:காட்டு யானைகளால் ஆதிமாதையனுார், தோலம்பாளையம் பகுதிகளில், 500 வாழை மரங்களும், ஏராளமான தென்னை மரங்களும் சேதமடைந்தன.

காரமடை வனப்பகுதிக்கு உட்பட்ட ஆதிமாதையனுார், தோலம்பாளையம், வெள்ளியங்காடு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இரவில் இப்பகுதிகளுக்கு வரும் யானைகள், வாழை, தென்னை மரங்களையும், தீவன பயிர்களையும், சோள பயிர்களையும் சேதப்படுத்துகின்றன.

இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆதிமாதையனுாரில் உள்ள தோட்டம் ஒன்றில், கடந்த நான்கு நாட்களாக மூன்று யானைகள் தொடர்ச்சியாக வந்து, 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. இதேபோன்று தோலம்பாளையம் பகுதியிலும் தோட்டம் ஒன்றில் காட்டு யானைகள் புகுந்து, தென்னை மரங்களை சேதம் செய்துள்ளன.

சேதமடைந்த தென்னை மரங்களை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் பார்வையிட்டார். சேதமடைந்த தென்னைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறுகையில்,"யானைகள் விவசாய பயிர்களை சேதம் செய்வது, வாடிக்கையாக நடக்கிறது. வனத்துறை, வேளாண் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு மிகவும், சொற்ப இழப்பீட்டுத் தொகை, பல மாதங்களுக்கு பிறகு வழங்குகின்றனர்.

தமிழக அரசு, வனத்துறையினர் இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு பதிலாக, யானைகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும்," என, கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X