கோத்தகிரி:கோத்தகிரி ஒன்னதலை சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில், 185 குடும்பங்கள் உள்ளன. தும்மனட்டி பிரதான சாலையில் இருந்து, கிராமத்திற்கு செல்லும் அரை கி.மீ., சாலை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, எவ்வித பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. செங்குத்தான சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளதால், வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம், ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற உள்ளதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும் போது சிக்கல் ஏற்படும். எனவே, சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.