ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; 20 நாட்கள் அவகாசம் வழங்கல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் 20 நாட்கள் அவகாசம் வழங்கி திரும்பிச் சென்றனர்.மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் மொட்டை விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.அதன்படி,
 ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; 20 நாட்கள் அவகாசம் வழங்கல்



அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் 20 நாட்கள் அவகாசம் வழங்கி திரும்பிச் சென்றனர்.

மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் மொட்டை விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடு மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 10:00 மணியளவில் விழுப்புரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் விஜயராணி, தனி தாசில்தார் ஞானம், செயல் அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பரபரப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து, தாசில்தார் அலெக்சாண்டர், அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஊராட்சித் தலைவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற 20 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், வீடற்றவர்களுக்கு கிராமத்தில் தகுதியான இடம் தேர்வு செய்து இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X