சாலையில் திரிந்த மாடுகள்: உரிமையாளர்களுக்கு அபராதம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் சுற்றித்திரிந்த 30 மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகரில் சுற்றித்திரியும் மாடுகளால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலமும் நீடித்து வருகிறது.இதனால், விழுப்புரம் எம்.ஜி.ரோடு, பாகர்ஷா
 சாலையில் திரிந்த மாடுகள்: உரிமையாளர்களுக்கு அபராதம்



விழுப்புரம் : விழுப்புரம் நகரில் சுற்றித்திரிந்த 30 மாடுகளைப் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

விழுப்புரம் நகரில் சுற்றித்திரியும் மாடுகளால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலமும் நீடித்து வருகிறது.

இதனால், விழுப்புரம் எம்.ஜி.ரோடு, பாகர்ஷா வீதி, திரு.வி.க.சாலை, அங்காளம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், சென்னை - திருச்சி நெடுஞ்சாலை பகுதிகளில் திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்களது இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.

இருப்பினும், இதை மாட்டின் உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால், விழுப்புரம் நகரில் நேற்று சுற்றித்திரிந்த 30 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

அந்த மாடுகளை காமராஜர் நகராட்சி பள்ளி மைதானத்தில் கட்டி வைத்து அதன் உரிமையாளர்களுக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த அபராத தொகையை 3 நாட்களுக்குள் செலுத்தி மாடுகளை அதன் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறினால், நகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு அந்த தொகையை நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X