பருவமழை வெள்ளம் காவாந்தண்டலம் ஏரிக்கு... பாயாது!:அணை, கால்வாய் தடுப்பு சுவருக்கு நிதி இல்லை;2,000 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகும் அவலம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:செய்யாற்றில் கட்டப்பட்ட அணைக்கட்டின் ஒரு பகுதியை சீரமைக்கவும், காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டவும், 12 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்காமல் உள்ளது. இதனால், ஏரிக்கு தண்ணீர் வராததால், 2,000 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகும் நிலையில், அதிருப்தியடைந்த விவசாயிகள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை
பருவமழை வெள்ளம் காவாந்தண்டலம் ஏரிக்கு... பாயாது!:அணை, கால்வாய் தடுப்பு சுவருக்கு நிதி இல்லை;2,000 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகும் அவலம்

காஞ்சிபுரம்:செய்யாற்றில் கட்டப்பட்ட அணைக்கட்டின் ஒரு பகுதியை சீரமைக்கவும், காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் தடுப்பு சுவர் கட்டவும், 12 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்காமல் உள்ளது. இதனால், ஏரிக்கு தண்ணீர் வராததால், 2,000 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகும் நிலையில், அதிருப்தியடைந்த விவசாயிகள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழை காரணமாக, நீர்நிலைகள் வேகமாக நிரம்பும் நிலையில், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், அதிகபட்சமாக வினாடிக்கு 7,000 கன அடி நீர் சென்றதால், உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையேயான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், செய்யாற்றை ஒட்டி செல்லும் நீர்வரத்து கால்வாய் மூலம், காவாந்தண்டலம் ஏரியை நிரப்ப முடியும்.

ஒவ்வொரு ஆண்டும், செய்யாற்று வெள்ள நீர், கால்வாய் மூலம் காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும்.

ஏரிக்கு முழுமையாக தண்ணீர் அனுப்ப, எட்டு கோடி ரூபாய் மதிப்பில், வெங்கச்சேரி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே, மூன்று ஆண்டுகளுக்கு முன், புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டின் ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர் வரத்து கால்வாய் மூலம், காவாந்தண்டலம் ஏரிக்கு சீராக செல்லும் வகையில் கட்டப்பட்டது.

அணைக்கட்டு கட்டியது முதல் கடந்தாண்டு வரை, நீர்வரத்து கால்வாய் மூலம் காவாந்தண்டலம் ஏரிக்கு தண்ணீர் சென்றது.

ஆனால், இந்தாண்டு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, ஏரி நிரம்பாமல் உள்ளது. ஏரிக்கு தண்ணீர் செல்லாததால், காவாந்தண்டலம் கிராம விவசாயிகள், கலெக்டரிடம் மனு அளித்து, வரும் டிசம்பர் 5ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

ஏரியில் சேகரிக்கப்படும் தண்ணீர் மூலம், 2,000 ஏக்கர் விவசாயம் செய்ய முடியும் எனவும், இம்முறை தண்ணீரின்றி சிரமம் ஏற்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காவாந்தண்டலம் ஏரிக்கு செய்யாற்றில் இருந்து தண்ணீர் செல்லாததற்கு, ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாயின் தடுப்பு சுவர் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக, நீர்வளத்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

நீர்வளத் துறையினர் தெரிவித்ததாவது:

செய்யாற்றில் இருந்து காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் வகையில், நீர்வரத்து கால்வாய் அகலமாக உள்ளது. ஆனால் கால்வாய்க்கான தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. தடுப்பு சுவரில் தண்ணீர் குழாய் அமைத்தவர்கள், கேபிள் பதித்தவர்களால் சேதமடைந்துள்ளது.

கால்வாயின் பல இடங்களில் பெரிய அளவில் துவாரங்களும் உள்ளன. கால்வாயில் தண்ணீர் அனுப்பினால், செய்யாற்றிலே வெள்ளம் வடியும். இதன் காரணமாக ஏரிக்கு தண்ணீர் அனுப்பவில்லை.

ஏரிக்கு செல்லும் கால்வாயில் புதிதாக தடுப்பு சுவர் கட்ட, 4 கோடி ரூபாய் கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.

மேலும், கடந்தாண்டு செய்யாற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, அணைக்கட்டின் கீழ் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வடிந்து செல்லும் இடத்தில் போடப்பட்ட கற்கள் அடித்து செல்லப்பட்டன.

சேதமடைந்த இடத்தை சீர்செய்ய, 8 கோடி ரூபாய்க்கு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.

அணைக்கட்டின் ஒரு பகுதி மற்றும் கால்வாயின் தடுப்பு சுவர் ஆகிய இரு பணிகளுக்கும், 12 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியுள்ளது. நிதி வந்தவுடன், பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காத்திருப்பு


அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வடிந்து செல்லும் பகுதி சேதமடைந்ததற்கு, செய்யாற்றின் குறுக்கே உடைந்த பாலமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. உடைந்த பாலத்தில் பெரும்பகுதி மணல் கொட்டி மூடப்பட்டது. இதனால், அணைக்கட்டிலிருந்து வடிந்து செல்லும் வெள்ள நீர், பாலத்தின் குறுகிய வழியில் மட்டுமே சென்றதால், அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமடைந்ததாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.


அணைக்கட்டின் ஒரு பகுதியை சீரமைக்க மற்றும் கால்வாய் தடுப்பு சுவர் கட்ட, 12 கோடி ரூபாய் நிதி கேட்டு, கடந்த ஜனவரி மாதம் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், காவாந்தண்டலம் ஏரியை நிரப்பவும் முடியாமல், 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கவும் முடியாமல் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X