திண்டிவனத்தில் ரூ.14 கோடி வரி பாக்கி; ஜப்தி, சீல் நடவடிக்கை எடுக்க முடிவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
திண்டிவனம், : திண்டிவனம் நகராட்சியில் 14 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதால் ஜப்தி, சீல் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திண்டிவனம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, காலி மனை வரி போன்றவற்றை முறையாக செலுத்தாததால் 14 கோடி ரூபாய் வரை வரி பாக்கி நிலுவையில் உள்ளது.நிலுவைத் தொகையை வசூலிக்க நகராட்சி பணியாளர்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள்



திண்டிவனம், : திண்டிவனம் நகராட்சியில் 14 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளதால் ஜப்தி, சீல் நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திண்டிவனம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, காலி மனை வரி போன்றவற்றை முறையாக செலுத்தாததால் 14 கோடி ரூபாய் வரை வரி பாக்கி நிலுவையில் உள்ளது.

நிலுவைத் தொகையை வசூலிக்க நகராட்சி பணியாளர்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள் தோறும் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை செலுத்தப்படாமல் உள்ளது.

இதனால், நகராட்சியில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது, மின் கட்டணம் செலுத்துவது, அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது போன்றவற்றில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி, 2022-23ம் நிதியாண்டிற்கான வரி பாக்கியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார்.

மேலும், நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைத்து வரிகளையும், நகராட்சிக்கு செலுத்தா விட்டால், நிலுவைதாரர்களின் பட்டியலை பொது மக்கள் கூடும் இடங்களில் விளம்பர பலகை மூலம் வெளியிடப்படும்.

தொடர்ந்து, ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X