அரசு பஸ் ஜப்தி: பயணிகள் மறியல்

Added : நவ 24, 2022 | |
Advertisement
செஞ்சி : செஞ்சியில் அரசு பஸ்சை ஜப்தி செய்து கீழே இறக்கியதால் ஆத்திரமடைந்த பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.செஞ்சியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி நீலவேணி, 60; இவர், கடந்த 2011ம் ஆண்டு செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே நடந்து சென்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். நஷ்ட ஈடு கேட்டு அவரது குடும்பத்தினர் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சின்னையா வீரப்பன் மூலம் வழக்கு
 அரசு பஸ் ஜப்தி: பயணிகள் மறியல்



செஞ்சி : செஞ்சியில் அரசு பஸ்சை ஜப்தி செய்து கீழே இறக்கியதால் ஆத்திரமடைந்த பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி நீலவேணி, 60; இவர், கடந்த 2011ம் ஆண்டு செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே நடந்து சென்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். நஷ்ட ஈடு கேட்டு அவரது குடும்பத்தினர் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சின்னையா வீரப்பன் மூலம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நீலவேணி குடும்பத்திற்கு 6.60 லட்சம் ரூபாய் வழங்க நீதிபதி மோகன் கடந்த 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த தொகையை வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி நளினகுமார் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதனையடுத்து, நேற்று மதியம் 3:00 மணியளவில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் செஞ்சி கூட்ரோட்டில் நிறுத்தி பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் முன் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி., பிரியதர்ஷினி மற்றும் போலீசார் பயணிகளை சமாதானம் செய்து செய்து மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு, பஸ்சை கோர்ட் ஊழியர்கள் கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X