இலங்கையில் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை!

Updated : நவ 26, 2022 | Added : நவ 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கொழும்பு,: போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், 5 கிராம் அளவுக்கு போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, போதைப் பொருள் கடத்தலின் மையமாக உள்ளது; போதைப் பொருள் பயன்பாடும் அங்கு அதிகரித்து வருகிறது. பறிமுதல்இதையடுத்து, 'ஐஸ்'
இலங்கை, போதைப் பொருள், மரண தண்டனை!

கொழும்பு,: போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், 5 கிராம் அளவுக்கு போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக, இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கை, போதைப் பொருள் கடத்தலின் மையமாக உள்ளது; போதைப் பொருள் பயன்பாடும் அங்கு அதிகரித்து வருகிறது.


பறிமுதல்இதையடுத்து, 'ஐஸ்' என்றழைக்கப்படும் 'கிரிஸ்டன் மெதாம்படெமின்' என்ற ஆபத்தான போதைப் பொருள், ௫ கிராம் அளவுக்கு வைத்திருந்தாலே மரண தண்டனை விதிக்கும் வகையில், நச்சுப் பொருள், அபின், அபாயகர மசோதா திருத்தச் சட்டம், கடந்த அக்., 19ம் தேதி அந்நாட்டின் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார். இந்த சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி, 5 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருந்தால், விற்பனை செய்தால் மரண தண்டனை விதிக்க முடியும்.இது குறித்து இலங்கையின் நீதி, சிறை நிர்வாகம், அரசியல் சாசன சீர்திருத்தத் துறைகளின் அமைச்சர் டாக்டர் விஜய தாசா ராஜபக்சே நேற்று கூறியதாவது:

மிகவும் ஆபத்தான போதைப் பொருள் மற்றும் நச்சுப் பொருள்கள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி வருகிறது. இது, கடந்த சில மாதங்களில், நம் கடற்படை அதிகளவில் பறிமுதல் செய்துள்ளதில் இருந்து உறுதியாகிறது.போதைப் பொருள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக அதிபர் அதிரடி பணிக்குழுவை உருவாக்க, சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதைத் தவிர ஒன்பது மாகாணத்தில் போதைப் பொருள் தடுப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளுடன், அதிபர் அதிரடி பணிக்குழு இணைந்து செயல்படும். இலங்கை வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது.


எதிர்பார்ப்புபோதைப் பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரியுள்ளோம். வரும் ஜனவரியில் இந்த நீதிமன்றம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.போதைப் பொருள் கடத்தல், பயன்பாடு, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர, தனிமனித உடல்நல பாதிப்பு, நாட்டின் வளர்ச்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.தற்போதுள்ள புள்ளி விபரங்கள் முறையாக தொகுக்கப்படாதவை. இதன்படி, நாட்டில், ஐந்து லட்சம் இளைஞர்கள் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களும் இதில் அடங்குவர். இது, மிகவும் தீவிரமான பிரச்னை.


அமல்சில அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர். இதனால், இனி பிடிபடும் கடத்தல் போதைப் பொருள்களில், 'சாம்பிள்' எனப்படும் மாதிரிகள் மட்டுமே எடுத்து வைக்கப்படும்; மீதமுள்ளவை, உடனடியாக அழிக்கப்படும்.போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விற்பனையை தடுக்கவும், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ௫ கிராம் அளவுக்கு ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தும்படி, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


46 ஆண்டுகளாக துாக்கு இல்லை!

இலங்கையில், 1979ல் இருந்து இதுவரை எந்த குற்ற வழக்கிலும் துாக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. கடந்த 1815ல் துவங்கிய பிரிட்டிஷார் ஆட்சியின்போதும் துாக்கு தண்டனை மிகவும் குறைவாகவே விதிக்கப்பட்டு வந்தது. கடந்த 1948ல் நாடு சுதந்திரம் அடைந்தபின், துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 1984ல் அங்கு, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்தது. அப்போது மீண்டும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல், பல்வேறு வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு 2௦௦4ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இவை நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே, போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், போதைப் பொருள் வைத்திருப்போருக்கு துாக்கு தண்டனை விதிப்பது தொடர்பாக பலமுறை ஆய்வு செய்யப்பட்டது. தற்போது போதைப் பொருள் வைத்திருப்போர், விற்போருக்கு துாக்கு தண்டனை விதிப்பதை தீவிரமாக செயல்படுத்துவதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-202217:09:47 IST Report Abuse
krishna AYYO INDHA SATTAM MATTUM DRAVIDA MODEL SORIYAAN MANNIL VANDHAAL NIRAYA UDAN PARUPPUGAL KAALI AAVAARGAL.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
25-நவ-202214:26:12 IST Report Abuse
Raj முதலில் நடைமுறை படுத்தவும், அப்புறம் பார்க்கலாம்....
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
25-நவ-202214:26:01 IST Report Abuse
Raj முதலில் நடைமுறை படுத்தவும், அப்புறம் பார்க்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X