மரக்காணம் : மரக்காணம் அருகே சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து செய்தனர்.
மத்திய நுண்ணறிவு சப் இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் தலைமையில், போலீசார் கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக மரக்காணம் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், மீன் ஏற்றிச் செல்லும் டிரேவில் மூட்டையில் மறைத்து வைத்து 1,250 லிட்டர் சாராயம் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரம் மாவட்டம், சிக்கராயபுரம் பகுதியைச் சேர்ந்த குமார், 47; என தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து சாராயம் மற்றும் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.