பஸ் ஸ்டாண்ட் விபத்து: பெண்ணுக்கு அரசு பணி

Added : நவ 24, 2022 | |
Advertisement
சூலுார்:சோமனுார் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பணி வழங்கப்பட்டது.கடந்த, 2017 செப்., 7ம் தேதி, சோமனூர் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், ஐந்து பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இதில், திருப்பூர் மாவட்டம், தேவராயம்பாளையத்தை சேர்ந்த நாராயணசாமி மகள் லதா, இடது காலை இழந்தார். இளங்கலை படித்து வந்தவர், விபத்தில்

சூலுார்:சோமனுார் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பணி வழங்கப்பட்டது.

கடந்த, 2017 செப்., 7ம் தேதி, சோமனூர் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், ஐந்து பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இதில், திருப்பூர் மாவட்டம், தேவராயம்பாளையத்தை சேர்ந்த நாராயணசாமி மகள் லதா, இடது காலை இழந்தார். இளங்கலை படித்து வந்தவர், விபத்தில் பாதிக்கப்பட்டதால், கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தார். பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் கோரிக்கைக்கு வலு சேர்த்தனர்.

ஐந்து ஆண்டு முயற்சிகளுக்கு பிறகு, அப்பெண்ணுக்கு பலன் கிடைத்துள்ளது. சூலுார் பேரூராட்சியில் இளநிலை உதவியாளர் பணியிடம் வழங்கி கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். அதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின், லதாவிடம் வழங்கினார். இதையடுத்து அவர், நேற்று முன்தினம் சூலுார் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமாரிடம் ஆவணங்களை அளித்து பணியில் சேர்ந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X