விவசாயிகளுக்கு பயிற்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
மயிலம் : விட்டலாபுரத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடந்தது.மயிலம் அடுத்த விட்டலாபுரத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி மண்ணா ஏகாம்பரம். இவர் நம்மாழ்வார் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வருகிறார். இதில் தோட்டப் பயிர்களான வெண்டை, கத்தரி, அவரை, புடலை, பாகல் உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.இந்த பண்ணையில் மயிலம் ஒன்றியத்தில்
 விவசாயிகளுக்கு பயிற்சி



மயிலம் : விட்டலாபுரத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடந்தது.

மயிலம் அடுத்த விட்டலாபுரத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி மண்ணா ஏகாம்பரம். இவர் நம்மாழ்வார் இயற்கை விவசாய பண்ணை நடத்தி வருகிறார். இதில் தோட்டப் பயிர்களான வெண்டை, கத்தரி, அவரை, புடலை, பாகல் உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த பண்ணையில் மயிலம் ஒன்றியத்தில் உள்ள வேம்பூண்டி, நெடிமொழியானுார், செண்டியம்பாக்கம், முட்டியூர், ஆலகிராமம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டிவனம் உழவர் நிலைய மேலாண்மை அலுவலர் ஜாய்ஸ்சின் சுமிதா, மயிலம் தொழில் நுட்ப மேலாளர் கோவிந்தசாமி, இயற்கை ஆர்வலர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X