அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிகண்டன், இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மத்திய செயற்குழு உறுப்பினர் சதீஷ் வரவேற்றார். ஓய்வு பெற்ற பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி வாழ்த்திப் பேசினார். முன்னாள் மாநில துணைத்



விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மணிகண்டன், இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மத்திய செயற்குழு உறுப்பினர் சதீஷ் வரவேற்றார். ஓய்வு பெற்ற பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி வாழ்த்திப் பேசினார்.

முன்னாள் மாநில துணைத் தலைவர் சிங்காரம் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

அதில், மாவட்ட தலைவராக சிங்காரம், துணைத் தலைவர்களாக பாலசுப்ரமணியன், மணிகண்டன், மாவட்ட செயலாளராக ஜெயக்குமார், இணைச் செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், தென்னரசு.

அமைப்பு செயலாளராக மருதமலை, பிரசார செயலாளராக கோவிந்தசாமி, பொருளாளராக குமரவேல், மத்திய செயற்குழு உறுப்பினர்களாக அய்யனார், டேவிட் குணசீலன், சதீஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஆதிமூலம், புருஷோத்தமன், கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், நான்கு சதவீத அகவிலைப் படியை ரொக்கமாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X