சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: விவசாயிகள் அதிர்ச்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
கடலுார் : டெல்டாவில் சம்பா சாகுபடி நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலுார் மாவட்ட டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி தாலுகா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் 70 முதல், 80 நாட்கள் கொண்ட பயிராக வளர்ந்துள்ளன.மேகங்கள் சூழ்ந்து



கடலுார் : டெல்டாவில் சம்பா சாகுபடி நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்ட டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி தாலுகா பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் 70 முதல், 80 நாட்கள் கொண்ட பயிராக வளர்ந்துள்ளன.

மேகங்கள் சூழ்ந்து இதமான வெயில் அடிப்பது, கடும் பனி கொட்டுவது, கிழக்கு காற்று வீசுவது போன்ற பருவநிலை மாற்றத்தால், டெல்டா பகுதியில் சம்பா பயிரில் பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது.

நெற்பயிர்களில் சோலை பூச்சி, இலைப்பேன், ஆனைக்கொம்பன், இலை சுருட்டு புழு போன்ற பூச்சிகளின் தாக்குதல் கடுமையாக உள்ளது.

விதவிதமான பூச்சிகளின் தாக்குதலால் பயிர்கள் சரியான வளர்ச்சி இல்லாமல் நெற்சோலைகளும் திடமாக இல்லை. ஆள் பற்றாக்குறை, இடுபொருள்கள் விலை அதிகரிப்பு போன்றவைகளால் சாகுபடி செலவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பூச்சிகளின் தாக்குதலால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், சம்பா பயிர்களுக்கு நான்கிற்கும் மேற்பட்ட பூச்சி மருந்துகள் வாங்கி தெளித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களும் சுமையாக விவசாயிகளின் தலையில் இறங்கி உள்ளது.

குளிர் காற்று காலத்தில் சம்பா பயிரில் பூச்சி தாக்குதல் அதிகரிக்கும் என்பது தெரிந்தும், மாவட்ட வேளாண்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர், இதனால், டெல்டா பகுதியில் பாதிப்பு அதிகமாக உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இனியும் காலம் கடத்தாமல், பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X