சொத்து பிரச்னை எதிரொலி; அக்கா மகனுக்கு கத்திவெட்டு

Added : நவ 24, 2022 | |
Advertisement
புவனகிரி : புவனகிரி அருகே, சொத்து பிரச்னையில் அக்கா மகனை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் மெயின் ரோட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் சரவணன். அதேப் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மனைவி சாந்தி. அக்கா, தம்பியான இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக, முன்விரோதம் இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், குடிபோதையில்



புவனகிரி : புவனகிரி அருகே, சொத்து பிரச்னையில் அக்கா மகனை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

புவனகிரி அடுத்த தம்பிக்குநல்லான்பட்டினம் மெயின் ரோட்டை சேர்ந்த கலியபெருமாள் மகன் சரவணன். அதேப் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மனைவி சாந்தி. அக்கா, தம்பியான இருவருக்கும் சொத்து பிரச்னை தொடர்பாக, முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், குடிபோதையில் சரவணன், சாந்தி வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த அவரது மகன் மகேந்திரனிடம் உன் தாயை வெளியில் வரச் சொல் என ஆவேசாமாக பேசினார். அவரை சமதானம் செய்ய முயன்ற மகேந்திரனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை மற்றும் தொடையில் வெட்டினார்.

இதில் மயங்கி விழுந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து சரவணனை, 45, கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X