மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில், கலெக்டர் பாலசுப்ரமணியம் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் இ - நாம் முறையில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இ - நாம் முறைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து, வேளாண் பொருட்களை கொள்முதல் செய்ய
 மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் திடீர் ஆய்வு



விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில், கலெக்டர் பாலசுப்ரமணியம் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் இ - நாம் முறையில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இ - நாம் முறைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து, வேளாண் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளும் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக, கடந்த வாரம் மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டது. அதிகாரிகள், வியாபாரிகள், விவசாயிகள் இடையே விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது.

அதில், வரும் 1ம் தேதி முதல், மக்காசோளத்திற்கு மட்டும் இ - நாம் முறையை செயல்படுத்துவது, அடுத்தடுத்து மற்ற வேளாண் விளைப்பொருட்களையும் இ - நாம் முறையில் கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தற்போது மறைமுக ஏலச்சீட்டு முறை மூலம் கொள்முதல் செய்யும் பணி தொடர்கிறது.

இந்நிலையில், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கலெக்டர் பாலசுப்ரமணியம் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். பல்நோக்கு சேமிப்பு கிடங்கிற்கு சென்ற அவர், அங்கிருந்த வேளாண் பொருட்கள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

அதன்பின், உரிய விலை மற்றும் பணப் பட்டுவாடா முறையாக செய்யப்படுகிறதா என விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, கழிவறை, கேண்டீன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, புதுக்கூரைப்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சப் கலெக்டர் பழனி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X