மாணவர் மீது தாக்குதல்; 2 பேர் மீது வழக்குப் பதிவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
புவனகிரி : புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் ஆண்டு விழா தொடர்பான முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி துவங்கியபோது, முன் வரிசையில் அமர்ந்திருந்த, 15 வயதுடைய மாணவர்



புவனகிரி : புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் ஆண்டு விழா தொடர்பான முன்னோட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி துவங்கியபோது, முன் வரிசையில் அமர்ந்திருந்த, 15 வயதுடைய மாணவர் மீது, பின் வரிசையில் அமர்ந்திருந்த 14, 15 வயதுடைய மாணவர்கள் இருவரும் கல்லை வீசினர். இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.

பின், நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த மாணவரை வழிமறித்து இரண்டு மாணவர்களும் தாக்கினர். இதில் காயமடைந்த மாணவர் புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து மாணவர் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார், இரு மாணவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X