சி.என்.பாளையம் சாலை அகலப்படுத்தப்படுமா?

Added : நவ 24, 2022 | |
Advertisement
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம்-சாத்திப்பட்டு சாலை மிக குறுகலாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.சி.என்.பாளையத்திலிருந்து மழவராயநல்லுார், பட்டீஸ்வரம், கொஞ்சிக்குப்பம், இடையர்குப்பம், நெல்லித்தோப்பு வழியாக சாத்திப்பட்டுக்கு தார் சாலையில், 15க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும்,
 சி.என்.பாளையம் சாலை அகலப்படுத்தப்படுமா?



நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம்-சாத்திப்பட்டு சாலை மிக குறுகலாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சி.என்.பாளையத்திலிருந்து மழவராயநல்லுார், பட்டீஸ்வரம், கொஞ்சிக்குப்பம், இடையர்குப்பம், நெல்லித்தோப்பு வழியாக சாத்திப்பட்டுக்கு தார் சாலையில், 15க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் கரும்பை ஏற்றி செல்லவும் இச்சாலை உதவியாக உள்ளது.

இதுமட்டுமல்லாமல், செம்மண் குவாரிக்கு கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன. மேலும், கடலுாருக்கு செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, கிராமத்து சாலையாக இருந்தாலும், சி.என்.பாளையம்-சாத்திப்பட்டு சாலை படு பிசியான சாலையாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த சாலை 3.50 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே உள்ளது. பல இடங்களில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடமுடியாத நிலை உள்ளது.

எனவே, இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X