கரும்பு விவசாயிகள் பிரச்னை; பேச்சுவார்த்தை தோல்வி

Added : நவ 24, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, கரும்பு விவசாயிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விருத்தாசலம் அடுத்த சித்துார் தனியார் சர்க்கரை ஆலை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு ரூ.110 கோடி நிலுவைத் தொகையை பாக்கி வைத்துள்ளது.இந்நிலையில், இந்த சர்க்கரை ஆலையை, ஹால்ஸ் என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில்
 கரும்பு விவசாயிகள் பிரச்னை; பேச்சுவார்த்தை தோல்வி



விருத்தாசலம் : விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, கரும்பு விவசாயிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விருத்தாசலம் அடுத்த சித்துார் தனியார் சர்க்கரை ஆலை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு ரூ.110 கோடி நிலுவைத் தொகையை பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த சர்க்கரை ஆலையை, ஹால்ஸ் என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் ஏலத்தில் எடுத்து, ஆலையை திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து, விவசாயிகள் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், விருத்தாச்சலம் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் பழனி தலைமையில், கரும்பு விவசாயிகளுடன் நேற்று நான்காம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது.

அதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், ஹால்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் நடேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். ஒரு வாரத்தில், ஹால்ஸ் நிர்வாகத்திடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என சர்க்கரை ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அய்யாக்கண்ணு கூறுகையில், 'பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்டமாக ஆலைக்கு சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X