வாக்காளர் விபரங்களை சரி பார்க்க சிறப்பு முகாம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கடலுார் : வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் இதர விபரங்களை சரி பார்த்துக் கொள்ள வரும் 26, 27ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் செய்திடும் பணி தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும்



கடலுார் : வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் இதர விபரங்களை சரி பார்த்துக் கொள்ள வரும் 26, 27ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் செய்திடும் பணி தற்போது நடந்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களை சரி பார்த்துக் கொள்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதற்கு, தங்களது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது வாக்காளர் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். மேலும், https://www.nvsp.in/, https://www.elections.tn.gov.in/ ஆகிய இணையதளங்களிலும் வாக்காளர் பட்டியல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் இதர விபரங்களை சரிபார்த்துக் கொள்ள, எதிர்வரும் 26 மற்றும் 27ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் நடைபெறும் நாட்களில், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X