போலீஸ் நிலையம்; பா.ம.க., முற்றுகை

Added : நவ 24, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் முதுநகர் காவல் நிலையத்தை, பா.ம.க.,வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் முதுநகர் காவல் நிலையத்தில், கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாலை 7:00 மணிக்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, முதுநகர் அடுத்த பிள்ளையார்மேட்டைச் சேர்ந்த சிவா, பா.ம.க., நிர்வாகிகள்



கடலுார் : கடலுார் முதுநகர் காவல் நிலையத்தை, பா.ம.க.,வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் முதுநகர் காவல் நிலையத்தில், கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாலை 7:00 மணிக்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, முதுநகர் அடுத்த பிள்ளையார்மேட்டைச் சேர்ந்த சிவா, பா.ம.க., நிர்வாகிகள் பற்றி சமூக வலைதளங்களில் அவதுாறாக பதிவிடுவதாகவும், இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் பா.ம.க.,வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று, பா.ம.க.,வினர் போராட்டத்தை கைவிட்டு 8:00 மணிக்கு கலைந்துச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X