மழையால் துறைமுக புதிய கட்டுமானங்கள் பாதிப்பு! கப்பல் அணையும் தளங்கள் சேதமாகும் அபாயம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில், கடல் சீற்றம் காரணமாக, கப்பல் அணையும் தளம் அமைந்துள்ள பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.கடலுாரில் 142 ஏக்கர் பரப்பளவில் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம், ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில் ஒன்று என்ற பெருமைக்குரிய துறைமுகமாகும். கரையிலிருந்து
மழையால் துறைமுக புதிய கட்டுமானங்கள் பாதிப்பு! கப்பல் அணையும் தளங்கள் சேதமாகும் அபாயம்

கடலுார் : கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில், கடல் சீற்றம் காரணமாக, கப்பல் அணையும் தளம் அமைந்துள்ள பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலுாரில் 142 ஏக்கர் பரப்பளவில் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம், ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில் ஒன்று என்ற பெருமைக்குரிய துறைமுகமாகும். கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.

தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட் லிமிடெட் கம்பெனியில் 'ப்ரொப்லின்' வாயு இறக்குமதி செய்தபோது, மக்கள் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால், கடந்த 2002ம் ஆண்டிற்கு பிறகு, இந்த துறைமுகத்திற்கு கப்பல் வருகை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடலுார் துறைமுகத்திற்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவக்க முடிவு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 'சாகர்மாலா' திட்டத்தில், கடலுார் துறைமுகத்தை ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்த ரூ.135 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து, துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இரண்டு கப்பல் அணையும் தளங்கள் அமைக்கும் பணி, 2018 அக்டோபரில் துவங்கியது.

இதற்காக துறைமுக முகத்துவாரத்தின் தெற்கு பகுதியில், 85 மீட்டர், வடக்கு பகுதியில் 210 மீட்டர் துாரத்திற்கு சிமென்ட் கான்கிரீட் கற்கள் கொட்டி அலை தடுப்பு அமைக்கப்பட்டது. முகத்துவாரப் பகுதியில் இருந்து பரவனாறு வரை 1,700 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், 9 - 10 மீட்டர் ஆழம் வரை துார் வாரி ஆழப்படுத்தப்பட்டது.

கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் வசதியாக, தலா 120 மீட்டர் நீளம், 21 மீட்டர் அகலம், 4.5 மீட்டர் உயரத்தில் இரண்டு கப்பல் அணையும் தளங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தயாராகிவிட்டது. பணி முடிந்து ஓராண்டாகிவிட்ட நிலையில், பயன்பாட்டிற்கு கொண்டு வந்து கப்பல் போக்குவரத்து எப்போது துவங்கும் என்ற நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 9ம் தேதி முதல் கடலுார் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு, அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தது. அலைகள் கடற்கரையில் நீண்ட துாரம் வரை வந்ததால், கரைகளில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டது.

அந்த வகையில், புதிய துறைமுக பகுதியிலும் மண் அரிப்பு ஏற்பட்டது. அப்போது, துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த கப்பல் அணையும் தளத்தின் ஒரு பகுதியில் முற்றிலும் மண் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இப்பகுதி சேதமாவதற்குள் சரி செய்யவும், துறைமுகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X