சுய உதவிக் குழுக்களில் கையாடல்: போலீசில் புகார்

Added : நவ 24, 2022 | |
Advertisement
நெல்லிக்குப்பம் : மகளிர் சுய உதவிக்குழுக்களில் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவியது.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் நத்தமேடு, லட்சுமிபுரம் பகுதிகளை சேர்ந்த 40 பெண்கள் இணைந்து, மாரியம்மன், விநாயகர் ஆகிய பெயர்களில் இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களை நடத்தி வந்தனர். இதன் தலைவிகளாக அதே பகுதியை
 சுய உதவிக் குழுக்களில் கையாடல்: போலீசில் புகார்



நெல்லிக்குப்பம் : மகளிர் சுய உதவிக்குழுக்களில் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவியது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் நத்தமேடு, லட்சுமிபுரம் பகுதிகளை சேர்ந்த 40 பெண்கள் இணைந்து, மாரியம்மன், விநாயகர் ஆகிய பெயர்களில் இரண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களை நடத்தி வந்தனர்.

இதன் தலைவிகளாக அதே பகுதியை சேர்ந்த சரளாவும், அவரது தம்பி மனைவி ரம்யாவும் உள்ளனர்.

குழு மூலமாக கடன் பெறும் பெண்கள் மாதந்தோறும் அதற்கான தவணை தொகையை தலைவியிடம் கொடுத்து, அவர் மூலமாக வங்கியில் செலுத்துவது வழக்கம். 18 மாதங்களுக்கு முன்பு வரை, உறுப்பினர்களிடம் இருந்து பெற்ற கடனுக்கான தொகையை வங்கியில் முறையாக செலுத்தி வந்துள்ளனர்.

ஆனால் அதன்பின், உறுப்பினர்கள் கொடுத்த பணத்தை தலைவிகள் வங்கியில் செலுத்தவில்லை.

வங்கியில் இருந்து கடனை திருப்பி செலுத்துமாறு உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் வந்த பிறகே, பணத்தை செலுத்தாதது தெரிய வந்தது. இதுகுறித்து, எஸ்.பி., சக்திகணேசனிடம் புகார் அளித்த பெண்கள் 40 பேர், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசனை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.

மனுவில், 'எங்களது பணம் ரூ.11 லட்சத்தை வங்கியில் செலுத்தாததால் அவசரத்துக்கு கடன் பெற முடியவில்லை.

குடும்பத்திலும் பிரச்னை வருகிறது' என, தெரிவித்துள்ளனர்.

இதை விசாரித்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன், இதுபோன்ற மோசடிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தான் விசாரிக்க வேண்டும்; அங்கு சென்று புகார் அளியுங்கள்' என கூறி அனுப்பி வைத்தார். ஒரே சமயத்தில் போலீஸ் நிலையத்துக்கு 40 பெண்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X