ஊரக வளர்ச்சி அலுவலகங்கள் 'வெறிச்'; 2வது நாளாக பொதுமக்கள் அவதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி அலுவலர்களின் போராட்டம் 2வது நாளாக நேற்றும் தொடர்ந்ததால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பணி நெருக்கடி திணிப்பு, விடுமுறை நாட்களில் ஆய்வு, இரவு நேர ஆய்வு போன்றவற்றை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி 2 நாள் சிறு விடுப்பு
 ஊரக வளர்ச்சி அலுவலகங்கள் 'வெறிச்'; 2வது நாளாக பொதுமக்கள் அவதி



கடலுார் : கடலுார் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி அலுவலர்களின் போராட்டம் 2வது நாளாக நேற்றும் தொடர்ந்ததால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பணி நெருக்கடி திணிப்பு, விடுமுறை நாட்களில் ஆய்வு, இரவு நேர ஆய்வு போன்றவற்றை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி 2 நாள் சிறு விடுப்பு போராட்டம் நேற்று முன்தினம் துவங்கியது.

இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. கடலுார் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அலுவலர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் உயர் அதிகாரி, ஊராட்சி செயலர் உள்ளிட்ட 1,300 பேரில் 715 அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் வெறிச்சோடி கிடந்தன.

அலுவலகங்களில் எந்த பணியும் நடக்கவில்லை. அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லையெனில், வரும் 14ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X