'தினமலர் - பட்டம்' வினாடி வினா; த.வீ.செ. பள்ளியில் உற்சாகம்

Added : நவ 24, 2022 | |
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழும், புதுச்சேரி கோனேரிக்குப்பம் ஆதித்யா இன்ஸ்டிடியூட்ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்டு ரிசர்ச் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தும் 'பதில் சொல்;அமெரிக்கா செல்' என மெகா வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது.த.வீ.செ.
 'தினமலர் - பட்டம்' வினாடி வினா;  த.வீ.செ. பள்ளியில் உற்சாகம்



ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.

'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழும், புதுச்சேரி கோனேரிக்குப்பம் ஆதித்யா இன்ஸ்டிடியூட்ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்டு ரிசர்ச் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தும் 'பதில் சொல்;அமெரிக்கா செல்' என மெகா வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது.

த.வீ.செ. பள்ளியில் நேற்று நடந்த போட்டியை, என்.பி.வி. கல்வி சேவை அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் த.வீ.செ. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதல்வர் ஆர்த்தி துவக்கி வைத்தார். ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் அண்டு ரிசர்ச் கல்வி நிறுவனத்தின் மாணவர் கவுன்சிலர் உரைகவி ரவி வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து, வினாடி வினா போட்டி நடந்தது. 8 அணிகளில் 2 அணிகள் சமமான மதிப்பெண்கள் பெற்றதால், டை பிரேக்கர் முறையில் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆறாம் வகுப்பு மாணவர்கள் சிவக்குமார், மாதேவ் ஆகியோரின் 'சி'அணி பள்ளி அளவில் முதலிடமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அமலேஸ்வரன், ராகுல் ஆகியோரின் 'டி' அணி இரண்டாமிடமும் பெற்றது.

போட்டியில் முதலிடம் பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் 'தினமலர்' கேடயம் மற்றும் சான்றிதழ், இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர், நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X