படியில் பயணித்த மாணவர்கள்; பஸ்சை நிறுத்திய டிரைவர்

Added : நவ 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கல்லுாரி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்ததால், அரசு பஸ்சை டிரைவர் இயக்காமல் நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு அரசு பஸ் விருத்தாசலத்திற்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது, கல்லுாரி மாணவர்கள் பஸ்சுக்குள் செல்லாமல், படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.டிரைவர் மற்றும் கண்டக்டரும் உள்ளே

கள்ளக்குறிச்சி : கல்லுாரி மாணவர்கள் படியில் தொங்கியபடி வந்ததால், அரசு பஸ்சை டிரைவர் இயக்காமல் நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.

உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 8:15 மணிக்கு அரசு பஸ் விருத்தாசலத்திற்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது, கல்லுாரி மாணவர்கள் பஸ்சுக்குள் செல்லாமல், படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

டிரைவர் மற்றும் கண்டக்டரும் உள்ளே வரும்படி கூறியும் மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால், டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு மீண்டும் இயக்க மறுத்தார்.

தகவலறிந்த உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை பஸ்சுக்குள் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காலை 8:50 மணிக்கு பஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X