12 பேர் மீது வழக்கு பதிவு

Added : நவ 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : பூண்டி கிராமத்தில் கார் கண்ணாடியை உடைத்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜன் மகன் ரஞ்சித்குமார்,33. இவர், கடந்த 2021ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், சின்னசேலம் அடுத்த பூண்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டியனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். கடந்த 2021ம் ஆண்டு அக்., மாதம் 9ம் தேதி



கள்ளக்குறிச்சி : பூண்டி கிராமத்தில் கார் கண்ணாடியை உடைத்த 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜன் மகன் ரஞ்சித்குமார்,33. இவர், கடந்த 2021ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், சின்னசேலம் அடுத்த பூண்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாண்டியனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். கடந்த 2021ம் ஆண்டு அக்., மாதம் 9ம் தேதி இரவு ரஞ்சித்குமாரும், அவரது பாட்டி தமிழரசியும் மாருதி பலேனோ காரில் (டி.என்15 எம்3330) சென்றுள்ளனர்.

பூண்டி அரசு பள்ளி அருகே சென்ற போது, அங்கிருந்த சிலர் காரை வழி மறித்து, கண்ணாடியை சேதப்படுத்தினர். இது குறித்து ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில், பூண்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல், சரவணன், மணி உட்பட 12 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X