முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில ரூ.25,000 நிதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என, கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், விடுத் துள்ள செய்திக்குறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அலுவலர் தகுதிக்குக்கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்களின் குழந்தைகளுக்காக சைனிக் பள்ளிகளில் 25



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என, கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், விடுத் துள்ள செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அலுவலர் தகுதிக்குக்கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்களின் குழந்தைகளுக்காக சைனிக் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளிகளில் அதிகளவிலான முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் சேருவதை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களின் கல்வி நிதிச்சுமையினை குறைத்திடும் பொருட்டும் ஆண்டிற்கு ரூ. 25 ஆயிரம் தொகையினை 2022-23ம் கல்வி ஆண்டு முதல் முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

எனவே, தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்புகொள்ளவும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X