உலக மரபு வார விழாவையொட்டி கல்வெட்டுகள் படியெடுக்கும் பயிற்சி

Added : நவ 24, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார் : உலக மரபு வார விழாவையொட்டி, கல்வெட்டுகள் படியெடுக்கும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.பண்டைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பொக்கிஷ புத்தகமாக இருப்பது கல்வெட்டுகள். இதனை படியெடுத்து, படித்து எவ்வாறு அறிந்து கொள்வது என்பது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்.உலக மரபு வார விழாவையொட்டி,
 உலக மரபு வார விழாவையொட்டி கல்வெட்டுகள் படியெடுக்கும் பயிற்சி



திருக்கோவிலுார் : உலக மரபு வார விழாவையொட்டி, கல்வெட்டுகள் படியெடுக்கும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

பண்டைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பொக்கிஷ புத்தகமாக இருப்பது கல்வெட்டுகள். இதனை படியெடுத்து, படித்து எவ்வாறு அறிந்து கொள்வது என்பது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில்.

உலக மரபு வார விழாவையொட்டி, திருக்கோவிலுார் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் கல்வெட்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறை சுவரில் உள்ள கல்வெட்டுகளை படி எடுத்து படிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, திருக்கோவிலுார் அகழ்வைப்பகம், கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் கபிலர் தொண்மை ஆய்வு மையம் ஆகியன சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 75 மாணவிகள் பங்கேற்றனர்.

பயிற்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தொல்லியல் அலுவலர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஜெயஸ்ரீ வரவேற்றார். கபிலர் தொண்மை ஆய்வு மையத் தலைவர் உதியன், மரபு வார விழா குறித்து பேசினார்.

காப்பாட்சியர் ரஷித்கான், கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், உதவி தலைமை ஆசிரியர் காமராஜ், அன்பழகன், கோவில் குருக்கள் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.நகர மன்ற சேர்மன் முருகன் மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், புவனேஸ்வரி, குமாரி செய்திருந்தனர்.

ஆசிரியர் ஜெயின் ஆஸ்நாத் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X