மத்திய பல்கலைகழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Added : நவ 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு



கள்ளக்குறிச்சி : மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும், தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மிகாமல் உள்ள மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இக்கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம். 2022-23ம் கல்வியாண்டில் புதி தாக விண்ணப்பிக்க விரும்பும், தகுதியான நபர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியும் அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை ஆணையர் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண் 004-29515942 மின்னஞ்சல் tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X