'கிரிப்டோ கரன்சி'யில் மோசடி ரூ.22 கோடி சுருட்டியவர் கைது

Added : நவ 24, 2022 | |
Advertisement
சென்னை:'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்யப் போவதாக, 22 கோடி ரூபாய் மோசடி செய்த சந்திரசேகரன், 45, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்துார் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இவரிடம், 100க்கும் மேற்பட்டோர், பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.அதற்கு, 2017 - 2020 வரை ரிட்டன்ஸ் என, மாதம் தோறும், 5 - 10 சதவீதம் தொகையை
 'கிரிப்டோ கரன்சி'யில் மோசடி ரூ.22 கோடி சுருட்டியவர் கைது

சென்னை:'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்யப் போவதாக, 22 கோடி ரூபாய் மோசடி செய்த சந்திரசேகரன், 45, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்துார் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். இவரிடம், 100க்கும் மேற்பட்டோர், பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

அதற்கு, 2017 - 2020 வரை ரிட்டன்ஸ் என, மாதம் தோறும், 5 - 10 சதவீதம் தொகையை வட்டியாக கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 2021ல், டிஜிட்டல் முறையிலான, 'கிரிப்டோ கரன்சி'யில் முதலீடு செய்யப் போவதாக கூறியுள்ளார். இதில், அதிக லாபம் கிடைக்கும் என, தன்னிடம் ஏற்கனவே முதலீடு செய்தவர்களை நம்ப வைத்துள்ளார்.

அதன்படி, கிரிப்டோ கரன்சியில், 22 கோடி ரூபாயை முதலீடு செய்து விட்டதாகவும் கூறி வந்தார்.

இந்த தொகைக்கான ரிட்டன்ஸ் என, முதலீட்டாளர்களின் வங்கி கணக்கிற்கு, 41 லட்சம் ரூபாயை மட்டும் அனுப்பி உள்ளார். அதன் பின், தலைமறைவாகி விட்டார்.

இவர் மீது, முதலீட்டாளர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, சந்திரசேகரனை நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X