கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்; விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா

Added : நவ 24, 2022 | |
Advertisement
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றிய விவசாயிகள், கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள சின்னசேலம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த 70 சதவீத விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர். விவசாயிகள் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை, ஆத்மா
 கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்; விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா



ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றிய விவசாயிகள், கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள சின்னசேலம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த 70 சதவீத விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர்.

விவசாயிகள் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை, ஆத்மா திட்டத்தின் கீழ், சின்னசேலம் அடுத்த பொன்பரம்பட்டு கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி மஞ்சப்பன் என்பவரின் விளை நிலத்திற்கு கண்டுணர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு, கரும்பு நாற்றுகளை உற்பத்தி செய்தல், கரும்பு பருக்கள் சீவல் இயந்திரம் செயல்படுத்தும் முறை, நுண்ணுயிர் பாசன சாகுபடியில் கரும்பு பயிரை இடைவெளிவிட்டு நடவு செய்தல், தோகை உரித்தல், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் நேரில் பார்த்து, சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

உதவி தொழில் நுட்ப மேலாளர் மணிவேல், கரும்பு உதவி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X