ரூ.611 தான் செலவு: சொல்கிறார் செயலர்

Added : நவ 24, 2022 | |
Advertisement
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து, அரசின் முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்தார். அதில், 'உள்ளாட்சி அமைப்பு சார்பில் வைக்கப்பட்ட பேனருக்கு, 350 ரூபாய் மட்டுமே செலவாகும்; ஆனால், 7,906 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது' எனக் குறிப்பிட்டு இருந்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்து, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலர் அமுதா வெளியிட்ட அறிக்கை:ஊரகப்

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்று முன்தினம் கவர்னரை சந்தித்து, அரசின் முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்தார். அதில், 'உள்ளாட்சி அமைப்பு சார்பில் வைக்கப்பட்ட பேனருக்கு, 350 ரூபாய் மட்டுமே செலவாகும்; ஆனால், 7,906 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது' எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலர் அமுதா வெளியிட்ட அறிக்கை:

ஊரகப் பகுதிகளில், ஆக.,15 முதல் அக்.,2 வரை, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சிறப்பு மக்கள் இயக்கம், அனைத்து ஊராட்சிகளிலும் நடந்தது. இதற்கு பேனர் அச்சடிக்கும் பணியில், எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை.

மாநிலம் முழுதும், 89 நிறுவனங்கள் வழியே, 27 மாவட்டங்களில் பேனர் அச்சிடப்பட்டு உள்ளது. ஒன்பது மாவட்டங்களில், அங்குள்ள அச்சகங்கள் வழியே இப்பணி மேற்கொள்ளப் பட்டது. மொத்தம், 84 ஆயிரத்து, 653 விளம்பரப் பதாகைகள், பல்வேறு அளவுகளில் அச்சடிக்கப்பட்டு உள்ளன. ஒரே ஒரு நிறுவனத்துக்கு ஆணை வழங்கப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பான தகவல்.

இவற்றின் சராசரி மதிப்பீடாக, பேனர் ஒன்றுக்கு ஜி.எஸ்.டி., உட்பட, 611 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒரு பேனருக்கு, 7,906 ரூபாய் செலவிடப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறு.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X