சங்கராபுரம் : பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சங்கராபுரம் பகுதி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
பெங்களூருவில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடந்த 23ம் தேதி நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ, மாணவிகள் 25 பேர் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement