மக்காச்சோளம் வயலில் அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 24, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட வயலில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தில் மக்காச் சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண் அலுவலர் பழனி வேல் ஆகியோர் வயல் ஆய்வு மேற்கொண்டு ஒட்டு ரகம் மற்றும் இதர ரகங்களில் புழுக்களின் தாக் குதல் மற்றும் அந்து
 மக்காச்சோளம் வயலில் அதிகாரிகள் ஆய்வு



சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட வயலில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தில் மக்காச் சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண் அலுவலர் பழனி வேல் ஆகியோர் வயல் ஆய்வு மேற்கொண்டு ஒட்டு ரகம் மற்றும் இதர ரகங்களில் புழுக்களின் தாக் குதல் மற்றும் அந்து பூச்சி இருப்பது கண்டறியப்பட்டது.

வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:

ஆழமான உழவு செய்வதின் முலம் மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்கள் வெளிப்படும் போது சூரிய ஒளி, மற்றும் பறவை களால் அவை அழிக்கப்படும். உழவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுவதன் முலம் கூட்டுப்பழுக்களை கட்டுப்படுத்தலாம்.

ஒரு கிலோ மக்காச் சோள விதைக்கு10 கிராம் நுண்ணுயிர் பூச்சிக் கொள்ளியான பிவேரியா வேசியானா அல்லது 10 கிராம் தயாமிதாஷம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இடைவெளி விட்டு மக்காச்சோளம் பயிரிடவேண்டும்" என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X