கரும்பு லோடு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு! கள்ளக்குறிச்சி நகரில் பொதுமக்கள் அவதி

Added : நவ 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் கரும்பு லோடு வாகனங்களால்போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள்கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரிலுள்ள முக்கிய சாலைகள் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி செல்கின்றன. ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரில் கரும்பு லோடு வாகனங்களால்போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள்கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரிலுள்ள முக்கிய சாலைகள் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி செல்கின்றன.

ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் நகரை கடந்து செல்கின்றன.

இதனால், எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கள்ளக்குறிச்சி நகரம் விளங்கி வருகிறது. குறிப்பாக, குறுகிய சாலையான காந்தி சாலையில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர், க.அலம்பளம், தண்டலை, அகர கோட்டாலம், மோகூர், செம்படாக்குறிச்சி, அரியபெருமானுார், ஆலத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கியவுடன் தியாகதுருகம், சங்கராபுரம் மார்க்கத்திலிருந்து ஏராளமான கரும்பு லோடு வாகனங்கள் நகருக்குள் நுழைந்து முக்கிய சாலைகளை கடந்து செல்கின்றன.

குறுகிய சாலைகளை அடைத்தபடி, கரும்பு வாகனங்கள் செல்லும் போது பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் முந்தி செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நகரின் மற்ற சாலைகளிலும் பிரதிபலிக்கிறது. அலுவலக நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

கலெக்டர், டி.எஸ்.பி., அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என, இந்த சாலையில் முக்கிய அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதற்கு மாற்று வழியாக சங்கராபுரம் சாலையில் ரோடு மாமந்துார் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கச்சிராயபாளையம் பிரிவு வழியாக மோ.வன்னஞ்சூர், சோமண்டார்குடி, சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, தோப்பூர், ஏர்வாய்ப்பட்டினம் வழியாக கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு செல்ல முடியும்.

இதனையொட்டி, தோப்பூர் - ஏர்வாய்பட்டினம் பகுதியை இணைக்கும் வகையில் கோமுகி ஆற்றின் குறுக்கே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. அப்பகுதியின் சுற்று வட்டாரத்தில் கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ, பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன.

இருப்பினும், தற்போதும் சங்கராபுரம் மார்க்கத்திலிருந்து கரும்பு வாகனங்கள் பல கள்ளக்குறிச்சி நகரை கடந்து செல்கிறது. இதனால், அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, கள்ளக்குறிச்சி நகர போக்குவரத்து பாதிப்புகளை தீர்க்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அதுவரை தற்காலிகமாக தியாகதுருகம், சங்கராபுரம் மார்க்கத்திலிருந்து வரும் கரும்பு லோடு வாகனங்கள் அனைத்தும் ரோடுமாமனந்தல் - ஏர்வாய்பட்டினம் சாலை வழியாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X