தாய் கண்டிப்பு; மாணவி தற்கொலை

Added : நவ 24, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்ததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை, தும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் 35, விவசாயி; இவரது மனைவி காமாட்சி. இவர்களது மூத்த மகள் சுவாதி, 17, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.கடந்த இரண்டு வாரமாக உடல் நிலை சரியில்லாததால், சுவாதி



சங்கராபுரம் : பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்ததை தாய் கண்டித்ததால் விஷம் குடித்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை, தும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் 35, விவசாயி; இவரது மனைவி காமாட்சி.

இவர்களது மூத்த மகள் சுவாதி, 17, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.

கடந்த இரண்டு வாரமாக உடல் நிலை சரியில்லாததால், சுவாதி வீட்டில் இருந்து வந்தார். நேற்று காலை சுவாதியை பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்துள்ளார்.

சுவாதி பள்ளிக்கு செல்லாமல் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை மோட்டாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதா நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார்.

புகாரின் பேரில், சங்கரா புரம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X