பா.ஜ.,விடம் அ.தி.மு.க., 'சரண்டர்' ஜன., 17ல் அணிகள் இணைப்பு விழா?

Added : நவ 25, 2022 | |
Advertisement
'குட்கா' ஊழல் வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், பா.ஜ., மேலிட நிபந்தனைகளை ஏற்பது குறித்து, பழனிசாமி தரப்பு பரிசீலித்து வருகிறது. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான ஜனவரி 17ல், அணிகள் இணைப்பு விழா நடத்தப்படலாம் என தெரிகிறது.சென்னை கிண்டி, ராஜ்பவனில் கவர்னர் ரவியை அ.தி.மு.க., இடைக்கால

'குட்கா' ஊழல் வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், பா.ஜ., மேலிட நிபந்தனைகளை ஏற்பது குறித்து, பழனிசாமி தரப்பு பரிசீலித்து வருகிறது. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான ஜனவரி 17ல், அணிகள் இணைப்பு விழா நடத்தப்படலாம் என தெரிகிறது.

சென்னை கிண்டி, ராஜ்பவனில் கவர்னர் ரவியை அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்து பேசினார்.

அப்போது, தி.மு.க., அரசு மீது சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, போதை கலாசாரம், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

கவர்னர் - பழனிசாமி சந்திப்பு குறித்து, தி.மு.க., அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், 'அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்திருப்பதால், தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக பழனிசாமி சந்தித்துள்ளார்' என்றார்.

குட்கா ஊழல் தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், அவர்கள் மட்டுமல்லாமல், மத்திய அரசின் வழக்குகளை எதிர்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா அல்லாத அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இடம்பெற வேண்டும் என, பழனிசாமி விரும்புகிறார்.

ஆனால், பிரிந்து கிடக்கிற அணிகள் இணைந்து, 1998 லோக்சபா தேர்தல் போல், அ.தி.மு.க., - பா.ஜ.., கூட்டணி, 2024 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது.

இதற்காக, பா.ஜ., வெற்றியை நிர்ணயிக்கிற 10 தொகுதிகளில், ஒரு தொகுதியை தினகரனுக்கு விட்டுக் கொடுத்து, அனைவரும் ஒன்றிணைவதற்கு அ.தி.மு.க.,விடம் பா.ஜ., மேலிடம் பேச்சு நடத்தி உள்ளது. ஆனால், பழனிசாமி இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை இழுத்து, அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைக்கும் ரகசிய பேச்சும் தோல்வி அடைந்துள்ளது.

அதன் வெளிப்பாடாக, 'பிரிந்துள்ள இரு அணிகளும் ஒன்றானாலும், அ.தி.மு.க., பழைய வலிமையை பெற முடியாது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருக்கிறார்.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், 'இனி அ.தி.மு.க., கரை சேர முடியாது' என கூறி விட்டார்.

அதனால், பழனிசாமிக்கு பா.ஜ., நிபந்தனைகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மீதான மத்திய அரசு வழக்குகள், கட்சி பொதுச்செயலர் வழக்கு விசாரணை, இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தனக்கு எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என பழனிசாமி கருதுகிறார்.

அதற்கு, பா.ஜ., மேலிடத்தின் ஆதரவு அவசியம் என்பதால், பிடிவாதத்தை கைவிட முன்வந்து உள்ளார். பா.ஜ., விரும்பும் 10 தொகுதிகளை ஒதுக்கவும், அக்கட்சியின் அறிவுரைப்படி அணிகளை இணைக்கவும் ஆலோசித்து வருகிறார்.

ஜன., 17ல் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில், இணைப்பு விழா நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X