விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் செயற்பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது.விவசாய மின் மோட்டார் களுக்கு இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். திருக்கோவிலுாரில் செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வந்த நிலையில், மாவட்டம் பிரிப்பு
 விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்



திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் செயற்பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது.

விவசாய மின் மோட்டார் களுக்கு இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும்.

திருக்கோவிலுாரில் செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வந்த நிலையில், மாவட்டம் பிரிப்பு காரணமாக தற்போது விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டதால் வெகுதுாரம் செல்ல வேண்டி உள்ளது.

எனவே செயற் பொறியாளர் அலுவலகத்தை அரகண்டநல்லுார் அல்லது கண்டாச்சிபுரத்தில் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகி ராஜா தலைமையில் அரகண்டநல்லுார் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வேல்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவர்களுடன் விழுப்புரம் செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X