தரமான நுால் வழங்க வேண்டும்

Added : நவ 25, 2022 | |
Advertisement
சூலுார்:"நெய்வதற்கு ஏற்ற நுால் ரகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என, பாரதிய கோவை மண்டல கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சங்கத்தின் மண்டல தலைவர் சந்திரசேகர், பொதுச்செயலாளர் நடராஜன் கூறியதாவது:நெகமம் காட்டன் மற்றும் கைத்தறி சேலைகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது; பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர்.

சூலுார்:"நெய்வதற்கு ஏற்ற நுால் ரகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என, பாரதிய கோவை மண்டல கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கத்தின் மண்டல தலைவர் சந்திரசேகர், பொதுச்செயலாளர் நடராஜன் கூறியதாவது:

நெகமம் காட்டன் மற்றும் கைத்தறி சேலைகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது; பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். அதற்கேற்ப உற்பத்தி இல்லை; தறிகளும் குறைவாக உள்ளன. கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர்களுக்கு கூலியை நிர்ணயிக்கின்றது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் கூலியை விட ஒரு சேலைக்கு, 300 ரூபாய் குறைவாக தருகின்றனர். அதனால், தற்போதைய நிலைக்கு ஏற்ப, ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைத்தறிக்கு ஒதுக்கப்படும் நுால் ரகங்கள் மிகவும் தரமற்றதாக உள்ளன. நெய்வதற்கு சிரமப்பட வேண்டி உள்ளது. அதனால், கூட்டுறவு சங்கங்கள் கேட்கும் நுால்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் பயன்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் கிடைக்கவில்லை. இதனால், 60 வயதுக்குள் இறந்த நெசவாளர்களின் குடும்பங்கள் தவிக்கின்றனர். அதனால், திட்டத்தின் படி, நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்ரா திட்டத்தின் மானியம் கிடைக்காத நெசவாளர்களுக்கு, உடனடியாக மானியம் பெற்று தரவேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி தரவேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, கோவையில் கைத்தறி துறை உதவி இயக்குனரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X