அரசு மருத்துவமனையில் 'லிப்டில்' சிக்கியோர் மீட்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அவரச சிகிச்சை பிரிவு கட்டடத்தில் மூன்று மாடிகள் உள்ளன. இப்பிரிவில், 24 மணி நேரமும் 'லிப்ட்' எனும் மின் துாக்கி இயக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு, கீழ்தளத்தில் இருந்து, இரண்டாம் மாடிக்கு செல்ல, மின் துாக்கியில் 10க்கும் மேற்பட்டோர் சென்றனர்.அதிக எடை காரணமாக, மின் துாக்கி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அவரச சிகிச்சை பிரிவு கட்டடத்தில் மூன்று மாடிகள் உள்ளன. இப்பிரிவில், 24 மணி நேரமும் 'லிப்ட்' எனும் மின் துாக்கி இயக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு, கீழ்தளத்தில் இருந்து, இரண்டாம் மாடிக்கு செல்ல, மின் துாக்கியில் 10க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

அதிக எடை காரணமாக, மின் துாக்கி இயங்கமால் ஸ்தம்பித்து நின்றது. மேலும், மூன்றாவது தளத்திலிருந்து வரவேண்டிய மின் துாக்கியும் அங்கேயே நின்றது.

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், மின் துாக்கியில் சிக்கியோரை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X