மேடவாக்கம் -- -சோழிங்கநல்லுார் மேம்பாலம்: 12.03 கோடி நிதி ஒதுக்கீடு ரூ.12.03 நிதி ஒதுக்கீடு

Added : நவ 25, 2022 | |
Advertisement
பெரும்பாக்கம்:சென்னை அடுத்த மேடவாக்கம் -- சோழிங்கநல்லுார் இடையிலான செம்மொழி சாலையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு, 12.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்தார்.சென்னை, மேடவாக்கம் -- சோழிங்கநல்லுாரை இணைப்பது செம்மொழி சாலை. இந்த சாலையில், மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் எல்காட் பகுதிகளுக்கு இடையே,

பெரும்பாக்கம்:சென்னை அடுத்த மேடவாக்கம் -- சோழிங்கநல்லுார் இடையிலான செம்மொழி சாலையில், உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு, 12.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தெரிவித்தார்.

சென்னை, மேடவாக்கம் -- சோழிங்கநல்லுாரை இணைப்பது செம்மொழி சாலை. இந்த சாலையில், மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மற்றும் எல்காட் பகுதிகளுக்கு இடையே, மழைக்காலத்தில் தண்ணீர் ஆறாக ஓடி தேங்கும்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, பல முறை துண்டிக்கப்படும்.

மேலும், மழைக்காலங்களில், செம்மொழி சாலை அருகே அமைந்துள்ள மூகாம்பிகை நகர், குருதேவ் காலனி, இந்திரா பிரியதர்ஷினி நகர், பெருமாள் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்தது.

செம்மொழி சாலையில், எல்காட் நிறுவனம் அருகே உள்ள சதுப்பு நிலத்தில், மதரப்பாக்கம், அரசன் கழனி, வேங்கை வாசல், மாடம்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழை நீர் தேங்குகிறது.

இந்த மழை நீரை முழுமையாக வெளியேற்றும் திறன், தற்போது உள்ள பாலத்தில் இல்லாததால், சாலையில் கரைபுரண்டு ஓடும் நிலைமை உள்ளது.

இதனால், இங்குள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த பிரச்னை கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

கடந்தாண்டு பெய்த மழையின்போது, இங்குள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியதை அறிந்த தமிழக முதல்வர், செம்மொழி சாலையில், எல்காட் -- செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கு இடையே, 70 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மேடவாக்கம் - -சோழிங்கநல்லுார் இடையே உள்ள செம்மொழி சாலையில், எல்காட்- செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கு இடையே, உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு 12.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் துவக்கப்பட்டு, 2023ம் ஆகஸ்டில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X