குடிப்பழக்கம் நோயாளியாக்கும்: விழிப்புணர்வில் 'அட்வைஸ்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 'அட்வைஸ்'

Added : நவ 25, 2022 | |
Advertisement
வால்பாறை:குடிப்பழக்கம் மனிதனை நோயாளியாக்கும், என, கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலகம் சார்பில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோட்ட கலால் அலுவலர் துவக்கி
 குடிப்பழக்கம் நோயாளியாக்கும்: விழிப்புணர்வில் 'அட்வைஸ்' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 'அட்வைஸ்'

வால்பாறை:குடிப்பழக்கம் மனிதனை நோயாளியாக்கும், என, கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலகம் சார்பில், மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோட்ட கலால் அலுவலர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், கலைக்குழுவினர் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பது, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், தப்பாட்டம் வாயிலாகவும், கலை நிகழ்ச்சி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால், துாக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காசநோய், உயர்ரத்த அழுத்தம், இருதய வீக்கம் ஏற்படுகிறது.

கண் பார்வை மங்குதல், கை, கால் வலிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. தொடர்ந்து குடிப்பதால், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாரடைப்பும் ஏற்படுகிறது.

குடிப்பழக்கம் மனிதனை நோயாளியாக்கி, அவனை தற்கொலைக்கு துாண்டுகிறது. மதுஅருந்தியும், போதைப்பொருட்கள் உட்கொண்டும் வாகனம் ஓட்டினால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வால்பாறை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

கோட்ட கலால் துறை அலுவலர் கூறுகையில், 'வால்பாறையில், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அட்டகட்டி, வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைக்குழு சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

'குடி' பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மாணவர்கள், பொதுமக்கள் அறிய வேண்டும். அதனால், உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,' என்றார்.


மாணவர்கள் பேரணி



பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லுாரி (சிம்ஸ்) ரோட்ராக்ட் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கல்லுாரி இயக்குனர் சுப்ரமணியம், பேரணியை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வரை சென்ற பேரணியில், போதை பொருள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தினர்.

மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி, போதைப்பொருட்களின் தீமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ சமுதாயம் விழிப்புணர்வு பெற்று, மற்றவர்களுக்கும் தெரிவிக்கவேண்டும், என்றார்.

கல்லுாரி பேராசிரியர்கள் பாலாஜி விக்னேஷ், முனைவர் கவிதா,முனைவர் கிரிபிரகாஸ், ரோட்ராக்ட் மாணவர் தலைவர் ரிதிகா, செயலாளர் ஹரினிகோபிகா, சிம்ஸ் ரோட்ராக்ட் மாணவர்கள், ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X