டூரிஸ்ட் வாகனங்கள் 'பார்க்கிங்' ஸ்டேன்மோரில் இடம் தேர்வு

Added : நவ 25, 2022 | |
Advertisement
வால்பாறை;வால்பாறையில், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ளது. இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட கார், வேன்கள் வந்து செல்கின்றன. ஆனால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத நிலையில், ரோட்டோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. சுற்றுலா வாகனங்களால்
 டூரிஸ்ட் வாகனங்கள் 'பார்க்கிங்' ஸ்டேன்மோரில் இடம் தேர்வு

வால்பாறை;வால்பாறையில், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ளது. இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட கார், வேன்கள் வந்து செல்கின்றன. ஆனால், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத நிலையில், ரோட்டோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. சுற்றுலா வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும் என்று, டூரிஸ்ட் கார், வேன் ஒட்டுனர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், ஸ்டேன்மோர் செல்லும் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டது.

நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, தாசில்தார் ஜோதிபாசு, இன்ஸ்பெக்டர் கற்பகம், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள், சுற்றுலா வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதற்கான இடத்தை பார்வையிட்டனர்.

அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு படிப்படியாக தீர்வு காணப்படுகிறது. முதல் கட்டமாக, டூரிஸ்ட் கார், வேன் நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, இருசக்கர வாகனங்கள் நிறுத்த விரைவில் தனி இடம் தேர்வு செய்யப்படும்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள, சாலையோர ஆக்கிரமிப்புக்கள் விரைவில் அகற்றப்படும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X