சென்னை:சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி வி.எம்.வேலுமணியை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எம்.என்.பண்டாரி ஓய்வு பெற்ற பின், பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில், மூத்த நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில், சென்னை, ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் சிலரை, இடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கும்; நீதிபதி வி.எம்.வேலுமணியை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கும், ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதிகள் பட்டு தேவானந்த், டி.ரமேஷ் ஆகியோரை சென்னை மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் மாற்ற பரிந்துரைத்துள்ளது.
தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் லலிதா கன்னிகாந்தி, டாக்டர் டி.நாகார்ஜுன், அபிஷேக் ரெட்டி ஆகியோர், கர்நாடகா, சென்னை, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கும் இடமாற்றம் செய்ய, கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.