குண்டும் குழியுமாக மாறிய மாமல்லை - புதுச்சேரி சாலை

Added : நவ 25, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், தற்போது விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன, கிழக்கு கடற்கரை சாலையாக இருந்து, தேசிய சாலையாக, 2018ல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில ஆண்டுகளாக, நிறுவனம், சாலையை பராமரிக்கவில்லை.தற்போதைய கன மழையில், சாலை பெயர்ந்து, அபாய பள்ளங்கள் ஏற்பட்டு சீரழிந்துள்ளது. குறிப்பாக, மாமல்லபுரம் -
 குண்டும் குழியுமாக மாறிய மாமல்லை - புதுச்சேரி சாலை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், தற்போது விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன, கிழக்கு கடற்கரை சாலையாக இருந்து, தேசிய சாலையாக, 2018ல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில ஆண்டுகளாக, நிறுவனம், சாலையை பராமரிக்கவில்லை.

தற்போதைய கன மழையில், சாலை பெயர்ந்து, அபாய பள்ளங்கள் ஏற்பட்டு சீரழிந்துள்ளது.

குறிப்பாக, மாமல்லபுரம் - கூவத்துார் இடையே, சாலை முழுதும் பள்ளங்கள் அதிகரித்துள்ளதால், இருசக்கர வாகனங்கள் சிக்கி, வாகன ஓட்டிகள் நிலைகுலைகின்றனர்.

பள்ளத்தில் கடப்பதை தவிர்க்க, வளைந்து வளைந்து கடந்து, பிற வாகனம் மோதி, விபத்தில் சிக்கும் அபாயத்தால் அச்சப்படுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர், போக்குவரத்து முக்கியத்துவம், பயணியர் நலன் கருதி சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X