போலி 'ரிசல்ட்' வெளியீடு டி.என்.பி.எஸ்.சி., எச்சரிக்கை

Added : நவ 25, 2022 | |
Advertisement
சென்னை:'இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியலை நம்ப வேண்டாம்' என, டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது.அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ல் நடந்தது. தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக,

சென்னை:'இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியலை நம்ப வேண்டாம்' என, டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ல் நடந்தது. தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக, போலி பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை நம்ப வேண்டாம்.

இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி., நியமனங்கள் அனைத்தும், தேர்வு முடிவு தரவரிசைபடியே நடக்கின்றன. எனவே, பொய்யான வாக்குறுதிகளை கூறி, சட்டத்துக்கு புறம்பாக வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம், விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வு முடிவுகளும், www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதில் மட்டுமே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X