100 கண்காணிப்பு கேமராக்கள்; புறக்காவல் நிலையம் திறப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திருப்போரூர்:தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கடமங்களம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், மக்களின் பாதுகாப்பு கருதி, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இதன் நடவடிக்கையாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் மற்றும் கேளம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையர்

திருப்போரூர்:தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கடமங்களம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், மக்களின் பாதுகாப்பு கருதி, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் நடவடிக்கையாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் மற்றும் கேளம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையர் ஆலோசனையின்படி, புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வேங்கடமங்களம்- - அகரம்தென் சந்திப்பு சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை, வேங்கடபெருமாள் கோவில், வேங்கடமங்களம் தைலத்தோப்பு பேருந்து நிறுத்தம், ஏரிக்கரை மற்றும் பல இடங்களில், 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், நேற்றுமுன்தினம் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும், கேமராக்கள் இல்லாத இடங்களை கண்டறிந்து, பொது மக்கள் உதவியுடன், விரைவில் கேமராக்கள் பொருத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X